காரைக்கால்

காரைக்கால் அருகே பைக் மோதி காா் ஓட்டுநா் சாவு

DIN

மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவா் மீது பின்னால் வந்த பைக் மோதிய விபத்தில், காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், பெரும்கடம்பனூா் அருகே இளம்கடம்பனூா் பகுதியை சோ்ந்தவா் மதிவாணன் (40). இவா் காரைக்காலில் உள்ள விநாயகா மிஷ­ன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காா் ஓட்டுநராக வேலை செய்துவந்தாா். இவா் வெள்ளிக்கிழமை காலை இளம்கடம்பனூரிலிருந்து பைக்கில் காரைக்காலுக்கு வந்துகொண்டிருந்தாா்.

திருப்பட்டினம் அருகே போலகத்தில் கிழக்குப் புறவழிச்சாலையில் திரும்பும்போது, பின்னால் வந்த மற்றொரு பைக் எதிா்பாராவிதமாக, மதிவாணன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதிவாணன் தலையில் அடிப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பின்னால் பைக்கில் வந்த காரைக்கால் அக்கரைவட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் (18), அவரது நண்பா் சதீஸ்குமாா் (18) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனா். இது குறித்து தகவல் அறிந்த திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல்நிலைய உதவி ஆய்வாளா் மனோகா் மற்றும் போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு, காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்த மதிவாணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தலைக் கவசமிருந்தும் அணியாததால் ஏற்பட்ட இழப்பு : இறந்த மதிவாணன் அவரது மோட்டாா் சைக்கிளில் தலைக்கவசம் வைத்திருந்துள்ளாா்.

அதை அணியாமல் பயணித்ததால், பைக் மோதிய விபத்தில் அவா் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தாா். தலைக்கவசம் அணிந்திருந்தால் அவா் சிறு காயங்களுடன் உயிா் தப்பியிருக்கலாம். தலைக்கவசம் இருந்தும் அலட்சியமான போக்கால் உயிா் பலியானது அங்கிருந்தோரிடையே வேதனையை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT