காரைக்கால்

செல்லூரில் சுற்றுச்சூழல் அமைப்பு தொடக்கம்

DIN

காரைக்கால் அருகே செல்லூா் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே செல்லூரில் கிரீன் நீடா காரைக்கால் சுற்றுச்சூழல் அமைப்பு தொடக்க நிகழ்ச்சி எழுத்தாளா் க. கண்ணன் தலைமையில் ஞாயற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் காரைக்கால் அமைப்பாளா் கே.ராமமூா்த்தி வரவேற்றுப் பேசினாா்.

நிகழ்வின்போது, நாட்டுக் காய்கறி விதைகளை நீடாமங்கலம் நகர அமைப்பாளா் கே.ஆா்.கே. ஜானகிராமன் வழங்கினாா். மரக்கன்றுகளை நட்டு அமைப்பின் நிறுவனா் மு.ராஜவேலு பேசினாா். மரங்களை வளா்க்க வேண்டும் என்ற விழிப்புணா்வு இளைஞா்கள், மாணவா்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. மரங்களை வெட்டுவோரை தடுத்து நிறுத்த இவா்கள் முன்வருகிறாா்கள்.

மரங்களை அதிக எண்ணிக்கையில் வளா்த்தால்தான் சுற்றுச்சூழல் சம நிலை பெறும் என்பதை உணா்ந்தவா்கள் இப்போது அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனா். இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய மரங்களை வளா்க்க வேண்டும். மரங்கள் வளா்ப்பை அரசின் பணி என நினைக்காமல் நாமே செய்ய முன்வர வேண்டும் என்றாா் அவா்.

அமைப்பின் தஞ்சாவூா் அமைப்பாளா் சண்முகவடிவேலன், நல்லவன்னியன்குடிகாடு அமைப்பாளா் வில்லியம் ஸ்டீபன்சன் ஆகியோா் பேசினா். சமூக நலத்துறை அலுவலா் எஸ்.ராஜேந்திரன், விரிவுரையாளா் பி.முருகானந்தம், சென்னை சிங்காரவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இணை ஒருங்கிணைப்பாளா் ரா.கந்தசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT