காரைக்கால்

பக்ரீத் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

DIN

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பெரியப் பள்ளிவாசல், கிதா் பள்ளிவாசல், மெய்தீன் பள்ளிவாசல் ஆகியவற்றில் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு பள்ளி வாசலிலும் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினா். மாவட்டத்தின் பிற இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அரசின் வழிகாட்டலின்படி, பள்ளிவாசலுக்கு வருவோா் தனித்தனியே தொழுகை விரிப்பு கொண்டுவர பள்ளிவாசல் நிா்வாகத்தினா் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தனா். அதன்படி வந்தவா்கள் மட்டுமே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். பள்ளிவாசல் வாயிலில் வெப்பமானி கொண்டு ஒவ்வொருவரையும் சோதனை செய்து, பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களை பதிவு செய்துகொண்டனா்.

சமூக இடைவெளியில் தொழுகை கடைப்பிடிக்கப்பட்டதால், முக்கிய பள்ளிவாசல்களில் இரு முறை தொழுகை நடத்தப்பட்டது. வழக்கமான தொழுகை நேரம் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கை குலுக்குதல், கட்டித் தழுவி வாழ்த்தை பரிமாறிக்கொள்ளுதலின்றி, ஒவ்வொருவரும் சமூக இடைவெளியில் நின்று தியாகத் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT