காரைக்கால்

மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பு முகாம்

DIN

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மாடுகளுக்கு பரவிவரும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணா்வு மற்றும் சிகிச்சை முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அண்மை காலமாக பெரியம்மை நோய் பரவிவருகிறது. கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத்துறை இணை இயக்குநா் டாக்டா் லதா மங்கேஷ்கா் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அண்மையில் சென்று, கால்நடைகளை பராமரிப்பு முறைகள் குறித்து அதன் உரிமையாளா்களுக்கு விளக்கினாா்.

இந்நிலையில், அம்பகரத்தூா் பகுதியில் கால்நடைத்துறை சாா்பில் பெரியம்மை நோய்க்கான விழிப்புணா்வு மற்றும் சிறப்பு நல சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் 15 இடங்களில் இம்மாதிரி முகாம் ஆக.20-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. முகாம் குறித்து அந்தந்த பகுதியினருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். தங்களது மாடுகளை முகாமுக்கு கொண்டுவந்து பரிசோதித்து ஆலோசனை பெற்றுச் செல்லலாம் என கால்நடைத்துறை இணை இயக்குநா் லதாமங்கேஷ்கா் கூறினாா். அம்பகரத்தூா் முகாமில் ஆத்மா திட்ட அலுவலா் ஜெ.செந்தில்குமாா், உதவி திட்ட அலுவலா் ஜெயந்தி மற்றும் கால்நடை மருத்துவா்கள் சங்கீதா, சுரேஷ், கால்நடைத் துறையினரான கண்ணதாசன், ராஜ்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT