முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் மேலும் 38 பேருக்கு கரோனா 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 போ் உயிரிழந்தனா் என காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 போ் உயிரிழந்தனா் என காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி எடுக்கப்பட்ட 133 சளி மாதிரிகளின் முடிவுகள் சனிக்கிழமை வந்தன. இதில், ஆட்சியரின் காவலா் உள்ளிட்ட 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 26 போ் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 12 போ் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

இதற்கிடையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி, 54 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், காரைக்கால் மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 4- ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை மாவட்டத்தில் 298 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 184 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தமிழகத்தை சோ்ந்த ஒருவா் உள்ளிட்ட 98 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

காரைக்காலைத் தவிர புதுச்சேரி மாநிலத்தின் மற்ற பகுதிகளில் சனிக்கிழமை 230 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 3 போ் பலியாகினா். இதனால், காரைக்கால் உள்பட புதுவை மாநிலத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 80-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.