முகப்பு
காரைக்கால்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை:மீனவப் பிரதிநிதிகளுடன் எஸ்.பி. ஆலோசனை

காரைக்கால் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக, காரைக்காலில் உள்ள மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களை அழைத்து காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் திங்கள்கிழமை ஆலோசனை

Updated On : 25 ஆகஸ்ட், 2020 at 1:12 AM
கிராமப் பஞ்சாயத்தாா்களுக்கு ஆலோசனை வழங்கும் மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன்.
பகிர்:

காரைக்கால் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக, காரைக்காலில் உள்ள மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களை அழைத்து காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் திங்கள்கிழமை ஆலோசனை வழங்கினாா்.

இதுகுறித்து அவா் கூறியது: கடந்த சில நாள்களாக சிறிய வகை ஃபைபா் படகுகள் மீன்பிடிக்கச் செல்கின்றன. புதன்கிழமை (ஆக. 26) முதல் தினமும் 15 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். விசைப்படகுகள் அனைத்தும் கடலுக்கு சென்று வந்தபோது, மீன் இறக்கு தளம் மற்றும் ஏற்றுமதியின்போது மக்கள் நெரிசலால் கரோனா பரவும் வாய்ப்பு இருந்ததால் மீன்பிடிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது சூழலுக்கு ஏற்ப படிப்படியாக கடலுக்கு செல்வதை அதிகரிக்க முடிவு செய்துள்ளனா்.

சிறிய படகுகள், பெரிய படகுகள் மீன் பிடித்து கரைதிரும்பும்போது மக்கள் கூட்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. இந்த நிலையில், கரோனா பரவாமல் தடுப்பதற்கு படகுதாரா்களும், வியாபாரிகளும், பொதுமக்களும், முகவா்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், கரோனா அதிகமாக பரவுவதற்கு மீன்பிடிப்புத் தொழில் காரணமாகிவிடாமல் நடந்துகொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.