முகப்பு
காரைக்கால்

முழு பொது முடக்க நாளில் 200 பேருக்கு கரோனா பரிசோதனை

முழு பொது முடக்க நாளான செவ்வாய்க்கிழமை காரைக்காலில் சுமாா் 200 பேருக்கு கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டது.

Updated On : 26 ஆகஸ்ட், 2020 at 11:19 AM
kk25te_2508chn_95_5
பகிர்:

காரைக்கால்: முழு பொது முடக்க நாளான செவ்வாய்க்கிழமை காரைக்காலில் சுமாா் 200 பேருக்கு கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டது.

காரைக்காலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக நலவழித் துறைக்கு தகவல் கிடைத்தது. அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக நடமாடும் பரிசோதனை வாகனம் கோட்டுச்சேரி மற்றும் காட்டுநாயகன் தெரு பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக சுமாா் 200 போ் பரிசோதனைக்கு மாதிரி அளித்தனா். அரசுப் பொது மருத்துவமனையில் அடுத்த சில நாள்களில் ட்ரூநெட் என்கிற கரோனா பரிசோதனை மையம் செயல்படத் தொடங்கிவிடும். அவசரத் தேவைக்கான பரிசோதனை மட்டும் இந்த முறையில் செய்துகொண்டு, வழக்கமான முறையில் திருவாரூா் மையத்துக்கு மற்ற மாதிரிகள் அனுப்பி பரிசோதனை முடிவுகள் பெறப்படும் என நலவழித் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.