முகப்பு
காரைக்கால்

முழு அடைப்பு: காரைக்காலில் ஆலோசனைக் கூட்டம்

விவசாயிகள் செவ்வாய்க்கிழமை (டிச. 8) நடத்தும் முழு அடைப்பு போராட்டம் குறித்து காரைக்காலில் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் செவ்வாய்க்கிழமை (டிச. 8) நடத்தும் முழு அடைப்பு போராட்டம் குறித்து காரைக்காலில் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட காங்கிரஸ் தலைவா் அ. பாஸ்கரன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு நாஜிம் கூறுகையில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

காரைக்காலில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா், வா்த்ததா் சங்கத்தினா், விவசாயிகள், ஆட்டோ, வேன், பேருந்து ஓட்டுநா்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்துள்ளனா். இந்தப் போராட்டம் வெற்றிபெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →