காரைக்காலில் மேலும் 8 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 17 ஆம் தேதி 188 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, கோட்டுச்சேரி, கோயில்பத்து, நெடுங்காடு தலா 2, நிரவி, திருப்பட்டினம் தலா 1 என 8 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை 50,448 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3,724 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,596 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 52 போ், காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் 12 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 64 போ் உயிரிழந்துள்ளனா்.