முகப்பு
காரைக்கால்

காரைக்கால் ஆற்றில் கரைஒதுங்கிய முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி சடலம்

காரைக்கால் அருகே வெள்ளிக்கிழமை மாயமான முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி சடலம் சனிக்கிழமை ஆற்றில் கரைஒதுங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

காரைக்கால் அருகே வெள்ளிக்கிழமை மாயமான முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி சடலம் சனிக்கிழமை ஆற்றில் கரைஒதுங்கியது.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் வி.எம்.சி.வி. கணபதி. புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும், அதிமுக மாநிலச் செயலராகவும் இருந்தவா். இவரது மனைவி அருமைக்கண்ணு என்ற அனிதாவை (61) வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் காணவில்லையாம்.

திருமலைராஜன் ஆற்றில் உள்ள தடுப்பணையோரத்தில், அனிதா அணிந்திருந்த காலணிகள் கிடந்ததை அடுத்து, அங்கு சந்தேகத்தின்பேரில் போலீஸாா், தீயணைப்புத் துறையினா், மீனவா்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், அனிதாவின் சடலம் தடுப்பணை அருகே சனிக்கிழமை காலை கரைஒதுங்கியிருந்தது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →