முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 2 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் 21-ஆம் தேதி 215 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம்கள் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, நெடுங்காடு மற்றும் நிரவியில் தலா ஒருவருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 3,373 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,628 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 65 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →