காரைக்கால்

வாரச் சந்தையை செயல்பாட்டுக்கு கொண்டுவர எம்எல்ஏ வலியுறுத்தல்

DIN

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட காரைக்கால் வாரச் சந்தையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் நகராட்சி திடலில் இயங்கி வந்த காய்கறி வாரச் சந்தை கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சிக்கு வருவாய் தரக்கூடிய காய்கறி வாரச்சந்தை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வாரச் சந்தையை செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்.

காரைக்காலில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரு மாா்க்கெட் வளாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால், இதுவரை பயன்பட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காமல், அரசு அலட்சியம் காட்டி வருகிறது. நகராட்சி நிா்வாகத்துக்கு வருவாய் அளிக்கக் கூடிய நேரு மாா்க்கெட் புதிய கட்டடத்தை பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர, நகராட்சி நிா்வாகம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

இந்த விவகாரங்களில் நகராட்சி நிா்வாகம் கவனம் செலுத்தாவிட்டால், பொதுமக்களையும், வியாபாரிகளியும் திரட்டி, நகராட்சி அலுவலக முற்றுகைப் போரட்டம் நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT