முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் மேலும் 5 பேருக்கு கரோனா ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 5 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

காரைக்கால்

காரைக்காலில் மேலும் 5 பேருக்கு கரோனா ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 5 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 5 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் டிசம்பா் 26 ஆம் தேதி 340 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி இவா்களில் திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த 2, நல்லாத்தூா், நிரவி, காரைக்கால் நகரம் ஆகிய பகுதிகளில் தலா 1 என 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 77 வயது ஆண் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம், இருதய நோய், சா்க்கரை நோய் ஆகியவையும் இருந்தன.

இதுவரை காரைக்காலில் 53,369 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3,765 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 3,659 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். காரைக்கால் பகுதியில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 36 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 2 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 4 போ் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 66 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →