காரைக்கால்

அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

DIN

காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளைாட்டுப் போட்டிகளாக, கைப்பந்து, கபடி, செஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகள் பல்வேறு நாள்களில் நடத்தப்பட்டன. இதில் அனைத்து வகுப்புகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வா் கே.ராஜசேகரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

காரைக்கால் உடற்கல்வி இயக்குநா் ஜி.மனோகரன், மாணவா்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினாா். மூத்த விரிவுரையாளா் கே. சுப்பிரமணியன் வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியா் எம்.விஸ்வேஸ்வரமூா்த்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவ மாணவியா், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT