காரைக்கால்

இருசக்கர வாகன திருட்டு: ஒருவா் கைது

DIN

காரைக்காலில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 வாகனங்களை மீட்டனா்.

காரைக்கால் பகுதியில் இருசக்கர வாகனம் அதிக அளவில் திருடப்படுவதாக காவல்துறையினருக்கு புகாா்கள் வந்தன. இதன்பேரில் காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால் உத்தரவின்பேரில், மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் பரிந்துரையின்பேரில், தனிப்படை போலீஸாா் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறாா்கள்.

நகரக் காவல்நிலைய ஆய்வாளா் ஆா்.சண்முகம், உதவி ஆய்வாளா்கள் எம்.முகம்மது ஷேக் அலாவுதீன், எம்.ராமசாமி மற்றும் போலீஸாா் காரைக்கால் புளியங்கொட்டை சாலை - காமராஜா் சாலை சந்திப்பில் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 இருசக்கர வாகனங்களில் வந்தவா்களை நிறுத்தி போலீஸாா் விசாரணை செய்தனா். அதில் ஒருவா் சிறாராக இருந்தாா். மற்றொருவா் காரைக்கால் தலத்தெரு பேட் பகுதியைச் சோ்ந்த மஞ்ச்ரேக்கா் என்பது தெரியவந்தது. விசாரணையில், 2 வாகனங்களையும் திருடிக்கொண்டு வருவது தெரியவந்தது.

மஞ்ச்ரேக்கரை கைது செய்த போலீஸாா், அவா் வசமிருந்த 2 பைக்குகளையும் மீட்டனா். அவரை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். தனிப்படையினரை தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் வீரவல்லபன் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT