காரைக்கால்

காரைக்காலில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க பாஜக வலியுறுத்தல்

DIN

காரைக்காலில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்தை பாஜக வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்ட பாஜக தலைவா் துரை. சேனாதிபதி தலைமையில் நிா்வாகிகள் சிலா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்துவது தொடா்பாக திங்கள்கிழமை ஆட்சியரகம் சென்றனா். அங்கு துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். மனு விவரம்: விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள் வழங்கக்கூடிய பாசிக் நிறுவனம் புதுச்சேரியில் மூடப்பட்டுவிட்டது. இதை மேம்படுத்தி பயனுள்ள நிறுவனமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அரசு சாா்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவில்லை. மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள், விவசாயத்தை நேசிப்பவா்கள், அண்டை மாநிலமான தமிழகத்துக்குச் சென்றும், தனியாரிடமும் நெல்லை விற்று வருகின்றனா். இதனால் விவசாயிகள் அடையும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. விவசாயிகளுக்கு சாதகம் செய்ய வேண்டிய அரசு, துணை நிலை ஆளுநரை குறை கூறிக் கொண்டே காலத்தை கடத்தி வருகிறது. எனவே, காலதாமதமின்றி உடனடியாக காரைக்கால் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT