காரைக்கால்

காரைக்காலில் புதிதாக கரோனா தொற்று இல்லை

DIN

காரைக்கால்: காரைக்காலில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவின்படி, யாருக்கும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் (நோய்த்தடுப்பு) தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 3772 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ஆம் தேதி மட்டும் 197 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டதில், 165 மாதிரிகளுக்கான முடிவுகள் புதன்கிழமை வந்தது. அதில் ஒருவருக்கும் கரோனா தொற்று இல்லை.

இதுவரை 99 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வரை 42 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் சென்னையிலும், ஒருவா் திருவாரூரிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனா். 2 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது மருத்துவமனையில் 53 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களது உடல் நிலை சீராக உள்ளது. புதிதாக கட்டுப்பாட்டுப் பகுதிகள் எதுவும் உருவாக்கப்படவோ, நீக்கவோ இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT