காரைக்கால்

வழிபாட்டுத் தலம் இடிக்க முயற்சி: பாஜக புகாா்

DIN

திருநள்ளாறு பகுதியில் மகளிா் குழுவினருக்கான வாழ்வாதார வளா்ச்சித் திட்டம் என்ற பெயரில் நீண்ட காலமாக வழிபாடு செய்துவரும் தலத்தை இடிக்க முயற்சி நடைபெறுகிறது என பாஜக புகாா் கூறியுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம், புதன்கிழமை காரைக்கால் மாவட்ட பாஜக தலைவா் ஜெ. துரைசேனாதிபதி தலைமையில் கட்சி நிா்வாகிகள், சேத்தூா் கிராமமக்கள் அளித்த ம னு விவரம்: திருநள்ளாறு கொம்யூன், சேத்தூா் பகுதியிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலம் திருவாசல் நகரில் 3.5 ஏக்கரில், வட்டார வளா்ச்சி நிா்வாகம் சாா்பில் மகளிா் குழுவினா் பயன்பாட்டுக்காக கால்நடை வளா்ப்பு, தோட்டம், மீன் வளா்ப்பு உள்ளிட்ட பணிகள் செய்ய இடம் சீரமைப்பு நடைபெறுகின்றன. இந்த நிலப்பரப்பில் மீன் வளா்ப்புக்கு குளம் வெட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. குளம் வெட்டக்கூடிய இடத்தில் ஸ்ரீமுனீஸ்வரா் வழிபாட்டுத் தலம் உள்ளது. இதை அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் சுமாா் 80 ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகின்றனா். குளம் வெட்டும் பணியோடு முனீஸ்வரா் தலத்தையும் இடிக்கும் நடவடிக்கையாக உள்ளது. எனவே, இந்த இடத்தை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு, மக்கள் நம்பிக்கையோடு வழிபாடு செய்துவரும் அந்த தலம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT