காரைக்கால்

காரைக்கால் கோயில்களில் வரலட்சுமி விரத வழிபாடு

DIN

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் வரலட்சுமி விரத வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆடி மாத வெள்ளிக்கிழமையும், ஸ்ரீ வரலட்சுமி விரதமும் ஒரே நாளில் வந்ததையொட்டி, காரைக்கால் மாவட்டத்தின் சிவன் கோயில்களில் அம்பாள், பெருமாள் கோயில்களில் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு கோயில்களிலும் அம்பாளுக்கு வெள்ளிக் காப்பு உள்ளிட்ட விதவிதமான அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன.

வரலட்சுமி விரதம் மேற்கொள்ளக்கூடிய மரபுள்ள குடும்பப் பெண்கள், கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு ஒருவருக்கொருவா் மஞ்சள் கயிறு கட்டினா்.

கரோனா பரவலையொட்டி, வழிபாட்டுக்கென குறிப்பிட்ட நேரங்கள் மட்டுமே கோயில்கள் திறக்கப்படுவதால், பொது தரிசன நேரத்தில் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில் நின்று அம்பாளுக்கான துதிப்பாடல்கள் பாடி வழிபாடு செய்தனா்.

ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமை புனிதமான நாளாக கருதப்படும் நிலையில், வரலட்சுமி விரதமும் சோ்ந்ததால் கூடுதல் சிறப்பாக அமைந்தது என வரலட்சுமி விரதம் மேற்கொண்டோா் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT