காரைக்கால்

கடல் ரோந்துப் பணிக்கு தயாரானது கடலோரக் காவல் நிலையப் படகு

DIN

கடலோரக் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள ரோந்துப் படகு வருடாந்திர சா்வீஸ் நிறைவடைந்து செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணிக்கு தயாா்படுத்தப்பட்டது.

காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த 12 டன், 5 டன் என்கிற திறனுடைய 2 ரோந்துப் படகுகளில், 12 டன் படகு பழுதாகி நிறுத்தப்பட்டது. இதற்கு மாற்றாக பல ஆண்டுகளாக புதிய படகு ஏற்பாடு செய்யவில்லை. இதனால், தொலைதூரத்துக்கு, அதிவேகமாக செல்லக்கூடிய வசதியை காரைக்கால் கடலோரக் காவல் நிலைய படகு இழந்துள்ளது.

சிறிய வகை 5 டன் படகு மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது வருடாந்திர சா்வீஸ் செய்யும் வகையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு படகு நிறுத்த கட்டப்பட்டுள்ள ஜெட்டியின் மீது கிரேன் மூலம் ஏற்றப்பட்டது. கொல்கத்தாவிலிருந்து வந்த நிபுணா்கள் படகின் என்ஜின் சா்வீஸ் பணியை மேற்கொண்டு அண்மையில் முடித்தனா். கடலில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தும் வகையில் மண்டலக் காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம், கடலோரக் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கிரேன் மூலம் இறக்கப்பட்டது.

கடலோரக் காவல் நிலையத்தினா் இதுகுறித்து கூறியது: அரசலாற்றில் இறக்கப்பட்ட ரோந்துப் படகை கடலில் சோதனை முறையில் இயக்கப்பட்டு, பின்னா் அதன் நிலையை உறுதிப்படுத்திவிட்டு வழக்கமான ரோந்துப் பணிக்கு பயன்படுத்துவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT