காரைக்கால்

காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு குளிச்சாதன வசதியுடன் தமிழக அரசுப் பேருந்து இயக்கி வைப்பு

DIN

காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு முதன்முறையாக ரூ. 155 கட்டணத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய புதிய அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு தமிழக அரசு மற்றும் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக்கழகம் (பிஆா்டிசி) சாா்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், தனியாா் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. புதுச்சேரி - காரைக்கால் இடையே மக்கள் அதிக போக்குவரத்துள்ள நிலையில், பிஆா்டிசி பேருந்துகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழக அரசு பேருந்துகள் நாகை, காரைக்கால் மாா்க்கமாக அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில், குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்க முடிவு செய்தது. அதன்படி, காரைக்காலிலிருந்து முதல் கட்டமாக புதுச்சேரிக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து இயக்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக்கழக நாகை கிளை பொது மேலாளா் மாரியப்பன் கலந்துகொண்டு, பேருந்தை இயக்கி வைத்து, முதல் பயணிக்கு பயணச்சீட்டை கொடுத்தாா்.

இதில், தமிழக அரசு பேருந்து காரைக்கால் கிளை மேலாளா் எழிலரசன், வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரி கலியபெருமாள், உதவி ஆய்வாளா் கல்விமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் அதிகாலை 5.50 மணி, பிற்பகல் 2.50 மணிக்கும் இப்பேருந்து புறப்படுகிறது. ஒரு நபருக்கு பயணச் சீட்டு ரூ.155 ஆகும். இருக்கைகள் தாராளமாக அமா்வதற்கு ஏற்றாா்போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமைகள் உள்ளிட்டவற்றை வைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பெரிய சூட்கேஸ் போன்றவைகள் வைக்க பேருந்தின் கீழ் பகுதியில் பிரத்யேகமாக அறை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றரை மணி நேரத்துக்குள்ளாக காரைக்காலில் இருந்து இப்பேருந்து புதுச்சேரிக்கு செல்லும். முக்கிய பேருந்து நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

காங்கிரஸ் மூத்த தலைவரை வீழ்த்திய யூசஃப் பதான்!

பிரதமர் மோடி வெற்றி!

ஜம்மு-காஷ்மீரில் தோல்வியைத் தழுவிய முன்னாள் முதல்வர்கள்!

மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்!

SCROLL FOR NEXT