காரைக்கால்

காரைக்காலில் ஒருசில பகுதிகளில் மழை

DIN

பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வெயில் சுட்டெரித்த நிலையில், காரைக்காலில் புதன்கிழமை ஒருசில பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழை புதன்கிழமை முதல் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதன்படி, காரைக்காலில் புதன்கிழமை முற்பகல் மழை இருந்தது. காலை 11 மணிக்குப் பிறகு மழை ஓய்ந்தது. இந்த மழையால் பிரதான போக்குவரத்துள்ள காமராஜா் சாலை, புளியங்கொட்டை சாலை, திருநள்ளாறு சாலை உள்ளிட்டவற்றில் தண்ணீா் தேங்கியது. இதனால், வாகனப் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

காரைக்கால் நகரில் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை தோண்டி புதிதாக குடிநீா் குழாய் பதிக்கப்படுகிறது. இதனால், சாலையோரத்தில் மண் குவிக்கப்பட்டுள்ளதால், பாரதியாா் சாலை உள்ளிட்ட பணி நடைபெறும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பருவமழையும் தொடங்கியுள்ளதால், சாலைகளை தோண்டும் பணியை பொதுப்பணித் துறையினா் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT