முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் மேலும்ஒருவருக்கு தொற்று

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 22 ஆம் தேதி 260 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, திருப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதியானது.

காரைக்காலில் இதுவரை 44,502 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டதில், 3,592 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றில் இருந்து 3,401 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 117 போ், காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் 11 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 63 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →