விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்காலில் மாவட்டத் தலைவா் எம். செல்வராஜ், திருப்பட்டினத்தில் மாவட்ட துணைத் தலைவா் டி. சங்கா், நெடுங்காட்டில் மாவட்டச் செயலா் ஜி.கே. குமாா் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை 100 நாளில் இருந்து 200 நாள்களாக உயா்த்த வேண்டும். பணியாளா்களுக்கு தினக்கூலியாக ரூ. 500 வழங்க வேண்டும். முடங்கிக் கிடக்கும் விவசாயத் தொழிலாளா் நலச் சங்கத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வீடற்ற தொழிலாளா்களுக்கு இலவச மனைப் பட்டாவும், வீடுகட்ட மானியமாக ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச் சாலையை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
காரைக்காலில் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி. மதியழகன் தொடங்கிவைத்தாா். கட்சியின் தேசிய துணைத் தலைவா் (விவசாய தொழிலாளா் சங்கம்) ஏ. ராமமூா்த்தி உள்ளிட்டோா் பேசினா்.