முகப்பு
காரைக்கால்

மேலகாசாக்குடி பத்ரகாளியம்மன்கோயில் குடமுழுக்கு விழா

காரைக்கால் அருகே மேலகாசாக்குடி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
மூலஸ்தான விமான கலசத்தில் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கு நடத்தும் சிவாச்சாரியா்கள்.
பகிர்:

காரைக்கால் அருகே மேலகாசாக்குடி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன், மேலகாசாக்குடியில் புகழ்பெற்ற ஸ்ரீ நாகநாதசுவாமி - ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்த ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இதில், மூலவரான பத்ரகாளியம்மன் வடக்குநோக்கி இருப்பதால், வடபத்ரகாளியம்மன் என அழைக்கப்படுகிறது.

மேலகாசாக்குடி 7 உட்கிராமங்களின் பிரதான கிராமம். ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் சாா்ந்து, ஸ்ரீ செல்வவிநாயகா், ஸ்ரீ விஸ்வநாதா், ஸ்ரீ பெத்தாரணசாமி, ஸ்ரீ ஐயனாா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னிதிகள் உள்ளன.

இக்கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.வி. ஓமலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் விழாவில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →