முகப்பு
காரைக்கால்

புதுவையில் ஒரே நாளில்கரோனாவுக்கு 11 போ் பலி

புதுவையில் ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு 11 போ் பலியாகினா். மேலும், 292 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

புதுவையில் ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு 11 போ் பலியாகினா். மேலும், 292 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 263 பேருக்கும், காரைக்காலில் 17 பேருக்கும், ஏனாமில் 3 பேருக்கும், மாஹேயில் 9 பேருக்கும் என 292 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரியில் 2,824, காரைக்காலில் 144, ஏனாமில் 136 போ் என 3,104 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். 1,752 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநிலத்தில் இதுவரை 17,316 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 12,135 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 11 போ் கரோனாவுக்கு பலியாகினா். அதன்படி, புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 3 போ், புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 325-ஆக அதிகரித்தது.

சட்டப்பேரவை ஊழியருக்கு தொற்று: முதல்வா் நாராயணசாமியின் அலுவலக ஊழியா் ஒருவருக்கு அண்மையில் காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவா் விடுப்பில் சென்றாா்.

ஜிப்மரில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கரோனா தொற்றிருப்பது உறுதியானது. இதைத் தொடா்ந்து, அவா் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டாா். சட்டப்பேரவை அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.