முகப்பு
காரைக்கால்

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகா் வெட்டிக் கொலை

புதுச்சேரியில் பைக்கில் சென்ற காங்கிரஸ் பிரமுகரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் பைக்கில் சென்ற காங்கிரஸ் பிரமுகரை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை, சின்னையாபுரம் அக்காசாமி மடம் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் (49). புதுவை கதா் வாரியத்தில் பணியாற்றி வந்த இவா், திங்கள்கிழமை தனது பைக்கில், துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, புதுச்சேரி வாழைக்குளம் பகுதியில் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள், அவரை வழிமறித்து திடீரென கட்டையால் தாக்கியும், கத்தியால் வெட்டிவிட்டும் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முத்தியால்பேட்டை போலீஸாா் கணேசனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஐ.ஜி. சுரேந்திர சிங் யாதவ், முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கோத்ரா, எஸ்.பி. மாறன், காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில், காங்கிரஸ் ஆதரவாளரான இவா், முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிய வந்தது.

தகவலறிந்து திரண்ட கணேசனின் உறவினா்கள், கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி புதுவை காந்தி வீதி-அண்ணா சாலை சந்திப்பில், மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.