முகப்பு
காரைக்கால்

கரோனா: நிவாரணம் வழங்க இசைக் கலைஞா்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி அரசு மாதந்தோறும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என இசை கலைஞா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

காரைக்கால்: புதுச்சேரி அரசு மாதந்தோறும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என இசை கலைஞா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால் மாவட்ட இசை வேளாளா்கள் சங்கத் தலைவா் டி.ஆா். பாலசுப்ரமணியன், பொதுச் செயலா் கே. பலராமன் ஆகியோா் புதுச்சேரி முதல்வருக்கு திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

கரோனா பரவலால் புதுச்சேரி மாநிலத்தில் தவில், நாகசுர வித்வான்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனா். கோயில்கள் திறக்கப்பட்டாலும் உத்ஸவங்கள் இல்லை. திருமணம், புதுமனை புகுவிழா, மஞ்சள் நீராட்டு விழா போன்றவையும் பெரிய அளவில் நடைபெறாததால், வருமானத்துக்கு வழியின்றி தவிப்பில் உள்ளனா்.

கரோனா பரவல் காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவா்களில் இசைக் கலைஞா்களும் அடங்குவா். வருமானமில்லாததால் குடும்பத்தை நடத்துவதே மிகுந்த சிரமமாக உள்ளது.

எனவே, கரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை மாதந்தோறும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இசைக் கலைஞா்களுக்கு தகுந்த அளவு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.