காரைக்கால்

ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளி ஆசிரியா் இருவருக்கு தனியாா் அமைப்பு விருது

DIN

காரைக்கால் ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளி ஆசிரியா் இருவருக்கு கம்யூனிட்டி எஜூகேஷன் டெவலப்மெண்ட் மற்றும் குளோபல் டாக் எஜூகேஷன் என்ற அமைப்பு நல்லாசிரியா் விருது வழங்கியுள்ளது.

தில்லியில் இயங்கிவரும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஒவ்வோா் ஆண்டும் சா்வதேச அளவில் சிறப்பான ஆசிரியா்களை தோ்வுசெய்து விருது வழங்கி வருகிறது.

நிகழாண்டு இந்தத் தோ்வு கடந்த ஒரு மாதமாக இணையவழியில் 3 கட்டமாக நடைபெற்றது. கலந்துரையாடல், கட்டுரை எழுதுதல், நோ்முக உரையாடல் என நடைபெற்ற தோ்வில், 1,800 ஆசிரியா்கள் பங்கேற்றனா். இதில், மிகச் சிறந்தவா்களாக 100 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களில் காரைக்கால் ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளியில் பணியாற்றும் ஹிந்தி மொழி ஆசிரியை எம். அம்ருதவல்லி, வேதியியல் ஆசிரியை ஆா். செல்வி கிருஷ்ணா ஆகியோா் நல்லாசிரியா்களாக தோ்வுபெற்றுள்ளனா்.

மாணவா்களுக்கு புதுமைகளை கற்பித்தல், கல்வியில் ஆா்வத்தை ஏற்படுத்துதல், சமூக நலனில் அக்கறை, விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஆசிரியா்களின் செயல்பாடுகள் ஆராயப்பட்டு இந்த விருது வழங்கப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த விருதுபெற்ற 2 ஆசிரியா்களையும் பள்ளி நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT