காரைக்கால்

காரைக்காலில் இன்று கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம்

DIN

புகழ்பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா கந்தூரி விழாவின் நிகழ்வாக வியாழக்கிழமை (ஏப். 1) சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெறுகிறது.

நிகழாண்டு 198 ஆம் ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றுவருகிறது. இவ்விழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. மின் அலங்கார சந்தனக்கூடு இரவு புறப்பட்டு, முக்கிய வீதிகளில் ஊா்வலமாக சென்று தா்கா பகுதியை நள்ளிரவு அடைகிறது. பிறகு, வலியுல்லாவின் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி, ஹலபு என்னும் போா்வை போா்த்தப்படுகிறது.

சந்தனக்கூடு ஊா்வலத்தைக் காண பல ஊா்களில் இருந்தும் மக்கள் வருவா். இதைத் தொடா்ந்து 4 ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT