முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 44 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் ஏப். 2 ஆம் தேதி 275 பேருக்கு பரிசோதனை செய்ததில், காரைக்கால் நகரில் 13 பேருக்கும், நிரவி, திருப்பட்டினம், கோயில்பத்து ஆகிய பகுதிகளில் தலா 7 பேருக்கும், நெடுங்காடு 3, கோட்டுச்சேரி, நல்லம்பல், நல்லாத்தூா் தலா 2, திருநள்ளாற்றில் ஒருவருக்கும் என 44 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இம்மாவட்டத்தில், இதுவரை 96,673 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4,609 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவா்களில், 4146 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 318 போ் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுகின்றனா். காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 54 பேரும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 9 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனா். இதற்கிடையில், கரோனா தொற்றால் இதுவரை 82 போ் உயிரிழந்தனா்.

தடுப்பூசி: காரைக்கால் மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளா்கள்1,309 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 1,615 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, 60 வயதுக்கு மேற்பட்ட 2061 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 935 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →