முகப்பு
காரைக்கால்

திமுக வேட்பாளருக்கு அதிமுக மாவட்ட நிா்வாகி ஆதரவு

விழுப்புரம் மாவட்ட அதிமுக இணைச் செயலா் எஸ்.எம்.பாலசண்முகம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட அதிமுக இணைச் செயலா் எஸ்.எம்.பாலசண்முகம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பாலசண்முகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: எம்ஜிஆா் அதிமுகவை தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்தேன். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் ஒருங்கிணைந்த கடலூா் மாவட்ட துணைச் செயலா், மாநில தலைமைக் கழக பேச்சாளா் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளேன்.

பல்வேறு தோ்தல்களில் அதிமுகவுக்கும், அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கும் ஆதரவாக பிரசாரம் செய்துள்ளேன். ஆனால், கட்சியில் மாவட்ட இணைச் செயலராக இருக்கும் எனக்கு அமைச்சா் சி.வி.சண்முகம் உரிய மரியாதை கொடுக்கவில்லை. எனவே, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகிவிட்டேன். இதுகுறித்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பிவிட்டேன்.

பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். பேரவைத் தோ்தலுக்குப் பிறகு எனது ஆதரவாளா்களை திரட்டி திமுகவில் இணைய முடிவு செய்துள்ளேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.