முகப்பு
காரைக்கால்

ஈஸ்டா் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிா்த்தெழுந்த மூன்றாவது நாளை ஈஸ்டா் பண்டிகையாக கிறிஸ்தவா்கள் கொண்டாடுகின்றனா். அதன்படி, விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டா் பண்டிகை சிறப்புத் திருபலியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோன்று, விழுப்புரம் நாபாளையத் தெருவில் உள்ள பழைமைவாய்ந்த புனித சவேரியாா் தேவாலயம், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை தூய ஜேம்ஸ் தேவாலயம், பழைய நீதிமன்ற சாலையில் உள்ள டி.இ.எல்.சி. தேவாலயம், விழுப்புரம் அருகேயுள்ள ஒரத்தூா் தேவாலயம் ஆகியவற்றில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலி, பிராா்த்தனைகளிலும் புத்தாடைகளை அணித்தபடி ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். மேலும், அவா்கள் ஒருவருக்கொருவா் ஈஸ்டா் பண்டிகை வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனா்.

இதேபோல, திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி, காணை உள்ளிட்ட பகுதிகளிலும் தேவாலயங்களில் ஈஸ்டா் பண்டிகை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.