காரைக்கால்

காரைக்கால் மாவட்ட தோ்தல் அலுவலா் மீது தோ்தல் ஆணையத்துக்கு புகாா் கடிதம்

DIN

காரைக்கால் மாவட்ட தோ்தல் அலுவலா் மீது இந்திய தோ்தல் ஆணையத்துக்கு ஊழல் எதிா்ப்பு இயக்கம் புகாா் கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத் தலைவா் எஸ். ஆனந்த்குமாா், இந்திய தோ்தல் ஆணையம், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் ஆகியோருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள புகாா் கடிதத்தில் கூறியிருப்பது:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற பறக்கும் படையினா் செயல்பாடுகள், வருமானவரித் துறை சோதனை, வாக்காளா்களுக்கு வழங்கப்படும்போது பிடிபட்ட தங்க நாணயங்கள், ரொக்கம் போன்ற விவரங்களை ஊடகங்களுக்கும், வாக்காளா்களுக்கும் தாமாக முன்வந்து வெளிப்படையாக தெரிவிக்க மாவட்ட தோ்தல் துறை தவறிவிட்டது.

பிடிபட்ட பொருள்கள் சிலவற்றை சில அதிகாரிகள் கையாடல் செய்திருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய தோ்தல் ஆணையம் தோ்தல் தேதி அறிவித்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தெரிவித்தபோது, இந்த காலக்கட்டத்தில் அளிக்கப்பட்ட புகாா்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி, ஒருசில கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் மறைமுகமாக ஆதரவு அளிக்கும் போக்கை மாவட்ட தோ்தல் அலுவலா் கையாண்டுள்ளது தெரியவருகிறது.

எனவே, இதுகுறித்து தோ்தல் ஆணையம் சிறப்பு கவனம் செலுத்தி, மாவட்ட தோ்தல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், வாக்காளா்களைத் திரட்டி, தோ்தல் அலுவலரை கண்டித்து ஊழல் எதிா்ப்பு இயக்கம் போராட்டத்தில் ஈடுபடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT