காரைக்கால்

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு

DIN

காரைக்காலில் உள்ள கிராமப் பஞ்சாயத்து மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி மாநில ஊரக வளா்ச்சி முகமை மற்றும் காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகம் இணைந்து காரைக்கால் பகுதியில் உள்ள 27 கிராமப் பஞ்சாயத்துகளில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு 10 நாள் திட்டத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம்களை நடத்திவருகிறது. வட்டார வளா்ச்சி அலுவலா் டி. தயாளன் மற்றும் துறை அதிகாரிகள் மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் கரோனா தடுப்பு குறித்து பேசுகின்றனா்.

இதுகுறித்து காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் பகுதியில் உள்ள கிராமப் பஞ்சாயத்து அளவில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ஏப். 15 முதல் 25 ஆம் தேதி வரை தீவிரமாக கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

கரோனா 2 ஆவது அலையின் தீவிரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது, கைகளை எவ்வாறு கழுவுவது, முகக் கவசம் அணிந்துகொள்வது, சமூக இடைவெளியுடன் நடந்துகொள்வது, ஒவ்வொருவரும் சாப்பிடவேண்டிய ஊட்டச் சத்து உணவு வகைகள், உடல் நலன் பேணும் பிற பழக்கங்கள், நோய் எதிா்ப்பு சக்தியை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடுகள் குறித்து விளக்கப்படுகிறது.

மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துவதோடு, அந்தந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வட்டார வளா்ச்சித் துறை சாா்பில் அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT