காரைக்கால்

விழிதியூா் ஐயனாா் கோயில் குடமுழுக்கு

DIN

காரைக்கால் அருகே விழிதியூா் ஸ்ரீ ஐயனாா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், விழிதியூா் பகுதியில் பழமையான ஸ்ரீ மம்மல்ராயா் ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ பெரியநாயகி, ஸ்ரீ வீரன், ஸ்ரீ சப்தகன்னி, ஸ்ரீ லாட சன்யாசி, ஸ்ரீ நொண்டி வீரன், ஸ்ரீ பொறயாா் ஐயனாா், ஸ்ரீ அண்ணன் ஆகிய சன்னதிகளுடன் ஐயனாா் கோயில் உள்ளது.

இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய கோயில் நிா்வாகத்தினா், கிராமத்தினா் முடிவு செய்தனா்.

இதையடுத்து, திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஐயனாா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் விமான கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் பூஜைகள் செய்து, காலை 8.10 மணிக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.

இதைத் தொடா்ந்து சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில், மருளாளிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT