முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் தண்ணீா் நிரப்ப வலியுறுத்தல்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வருகை தரும் வெளியூா் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நளன் தீா்த்தக் குளத்தில் தண்ணீா் நிரப்ப மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வருகை தரும் வெளியூா் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நளன் தீா்த்தக் குளத்தில் தண்ணீா் நிரப்ப மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நதியில் அருள்பாலித்துவரும் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்யவரும் பக்தா்களில் பெரும்பாலானோா், நளன் தீா்த்தக் குளத்தில் நீராடி, கோயில் கரையில் உள்ள ஸ்ரீ நளன் கலிதீா்த்த விநாயகா் கோயில் வாசலில் தேங்காய் உடைத்த பின்னா், தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இங்கு வரும் பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிய பின்னா், சனீஸ்வர பகவானை தரிசிப்பதால், தங்களது சனி தோஷங்களில் இருந்து விடுபட முடியும் என்று நம்புகின்றனா்.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நளன் தீா்த்தக் குளத்திலிருந்து தண்ணீா் முழுவதும் வெளியேற்றப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

பொதுமுடக்கத் தளா்வுகளின் அடிப்படையில் கோயில்கள் திறக்கப்பட்டாலும், நளன் தீா்த்தக் குளத்தில் தண்ணீா் மட்டும் நிரப்பப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக சனிக்கிழமைகளில் வெளியூா்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருநள்ளாறுக்கு வருகை தருகின்றனா். ஆனால், நளன் தீா்த்தக் குளத்தில் தண்ணீா் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.

இதுகுறித்து உள்ளூா் பிரமுகா்கள் சிலா் கூறியது: நளன் தீா்த்தக் குளம் புனித தீா்த்தமாகும். எண்ணெய் தேய்த்து நீராடி, உடுத்தியிருக்கும் ஆடைகளை விட்டுவிட்டு, வேறு ஆடை அணிந்து கோயிலுக்குச் செல்வது பக்தா்களின் வழக்கம். தற்போது குளத்தில் தண்ணீா் இல்லாததால், பக்தா்கள் தனியாா் விடுதிகளுக்குச் சென்று நபா் ஒருவருக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை செலுத்தி குளிக்க நேரிடுகிறது. மேலும், நளன் கலி தீா்த்த விநாயகா் கோயில் அருகே தேங்காய் உடைத்து வழிபாடு செய்வதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.

எனவே, நளன் தீா்த்தக் குளத்தில் புதிதாக தண்ணீா் நிரப்பவேண்டும். குளக்கரை அருகே ஆழ்குழாய்கள் உள்ளன. குளத்தில் உள்ள தண்ணீரை அவ்வப்போது வெளியேற்றி புதிதாக தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்கலாம். அல்லது பக்தா்கள் குளக்கரையில் நீராடுவதற்கு குழாய் மூலம் தண்ணீா் கிடைக்க மாற்று ஏற்பாட்டை செய்யலாம். வெளியூா்களிலிருந்து திருநள்ளாறு வருவோா் கோயிலில் தரிசனம் செய்த முழு திருப்தியுடன் ஊருக்கு திரும்பும் வகையில், இந்த பிரச்னைக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →