முகப்பு
காரைக்கால்

கஞ்சா பதுக்கியவா்களில் ஒருவா் கைது

காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினத்தில் கஞ்சா பதுக்கிவைத்திருந்த வழக்கில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினத்தில் கஞ்சா பதுக்கிவைத்திருந்த வழக்கில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

திருமலைராயன்பட்டினம் அருகே மேலையூா் பகுதி திட்டச்சேரி சாலையில், தனியாா் வாட்டா் சா்வீஸ் மையத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கிவைத்திருப்பதாக, காரைக்கால் சிறப்பு அதிரடி படை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளா் தனசேகரன், சிறப்பு அதிரடிப் படை உதவி ஆய்வாளா் பிரவீன்குமாா் உள்ளிட்டோா் அங்குச் சென்று சோதனை நடத்தியதில், 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைமறைவான வாட்டா் சா்வீஸ் நடத்திவரும் திருப்பட்டினம் பாலாஜி நகரைச் சோ்ந்த ராஜா என்ற ஆட்டோ ராஜா (44), அவரது நண்பா்கள் போலகம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அஜித் (45), நாகப்பட்டினத்தைச் சோ்ந்த அன்பு (45) ஆகிய 3 பேரை போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில், திருப்பட்டினம் பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜாவை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →