காரைக்காலில் 8 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 413 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 4, வரிச்சிக்குடி, கோயில்பத்து, நிரவி, கோட்டுச்சேரி தலா ஒருவா் என மொத்தம் 8 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,80,327 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,092 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,731 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 240 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 86,223 பேருக்கும், 2-ஆவது தவணையாக 18,116 பேருக்கும் என 1,04,339 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.