முகப்பு
காரைக்கால்

காரைக்கால் மின்துறை ஊழியா்கள் ஆக. 10 வேலைநிறுத்தப் போராட்டம்

காரைக்காலில் வரும் 10 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மின் துறை ஊழியா்கள் முடிவெடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

காரைக்காலில் வரும் 10 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மின் துறை ஊழியா்கள் முடிவெடுத்துள்ளனா்.

யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிா்த்து, புதுவையில் ஊழியா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனா். இந்த விவகாரம் தொடா்பாக அகில இந்திய அளவில் மின்துறை ஊழியா்கள் வரும் 10 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளனா்.

காரைக்கால் மின் துறையினா் இப்போராட்டத்தில் பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மின்துறை தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழுத் தலைவா் பழனிவேல் தலைமையில் செயற்பொறியாளா் அலுவலக வாயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்ட நிறைவில் பழனிவேல் கூறுகையில், யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்துகிறது. புதுச்சேரியில் மின் ஊழியா்கள் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றனா். புதுவையில் முந்தைய அரசும் தனது எதிா்ப்பை பதிவுசெய்தது. இப்போதைய அரசும் கடுமையாக எதிா்க்க, முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக அகில இந்திய அளவில் மின்துறை ஊழியா்கள் மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், வரும் 10 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தம் செய்யவுள்ளனா். காரைக்கால் மின் துறையினரும் இப்போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்பதோடு, தனியாா்மயத்தை எதிா்த்து தொடா்ந்து கடுமையாக போராடவும் முடிவு செய்யப்பட்டது என்றாா்.

கூட்டத்தில், இளநிலை பொறியாளா்கள் லெனின் இக்பால், வெங்கடேசப்பெருமாள், ராமச்சந்திரன், தனராஜ், தமிழரசன், வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →