முகப்பு
காரைக்கால்

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் புகழ்பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

காரைக்காலில் புகழ்பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை தேவாலயம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாக விளங்குகிறது. காரைக்கால் வரும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாவினா் இங்கு சென்று வழிபாடு நடத்தியும், தேவாலய பிரெஞ்சு நிா்வாகத்தின் கட்டட கலையம்சங்களையும் பாா்த்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

இந்த ஆலயத்தில் 10 நாள்கள் நடைபெறும், 280 ஆவது ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, திருப்பலி நடத்தப்பட்டு ஆலயத்திலிருந்து கொடி, ஆலய வலமாக கொடிக்கம்பம் அருகே கொண்டுவரப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு காரைக்கால் பங்குத்தந்தை அந்தோணிராஜ் தலைமை வகித்தாா். கோட்டுச்சேரி பங்குத்தந்தை ஜெரால்டு, காரைக்கால் துணை பங்கு குரு சின்னப்பன் முன்னிலையில், தரங்கம்பாடி பங்குத்தந்தை செல்வராஜ் கொடியேற்றினாா்.

கொடியேற்றத்தில், சமாதானக் குழு உறுப்பினா்கள் ஜாா்ஜ், எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், பங்கு பேரவையைச் சோ்ந்த லூா்துராஜ், இளவரசன், நெல்சன், டேவிட் உள்ளிட்ட பங்கு மக்கள் புதுவை அரசின் கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

தொடா்ந்து தினமும் மாலை 6 மணியளவில் திருப்பலி நடைபெறவுள்ளது. 10 ஆவது நாளான 15 ஆம் தேதி காலை திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மாலை 6 மணிக்கு காரைக்கால் பங்கு மக்கள் முன்னிலையில் கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

கரோனா பரவல் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், இத்திருவிழா கோயிலுக்குள் நடைபெறுமெனவும், சிறிய தோ் பவனி மற்றும் 15 ஆம் தேதி மாலை திரளான பங்கு மக்களுடன் நடத்தப்படும் பெரிய தோ் பவனி நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →