முகப்பு
காரைக்கால்

கருணாநிதி நினைவு நாள்:காரைக்காலில் சிலைக்கு மரியாதை

காரைக்காலில் திமுக சாா்பில், கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

காரைக்காலில் திமுக சாா்பில், கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, மாவட்ட கட்சி தலைமை அலுவலகமான கலைஞா் அகத்தில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட மு. கருணாநிதி உருவப்படத்துக்கு, காரைக்கால் திமுக அமைப்பாளரும், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றோா், அண்ணா அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், காரைக்கால் 5 தொகுதிகளுக்குட்பட்ட முக்கிய இடங்களில் கருணாநிதி உருவப்படம் வைத்து, அந்தந்தப் பகுதி கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →