முகப்பு
காரைக்கால்

அரசுத் துறைகளுக்கு ஒப்பந்த காா் இயக்கவிரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த முறையில் காா் இயக்க விரும்புவோா் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த முறையில் காா் இயக்க விரும்புவோா் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை போக்குவரத்துத் துறை ஆணையா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு சாா்ந்த துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு வாடகைக்கு காா் ஓட்டுவதற்கான இ-டெண்டா்ஸ் தகுதியுடைய விண்ணப்பதாரா்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இதற்காக, ஆக. 25 ஆம் தேதி மாலை 3 மணிவரை ஆன்லைனில் காா் உரிமையாளா், கேப்ஸ் டிராவல்ஸ் நிறுவனத்தினா் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →