முகப்பு
காரைக்கால்

விநாயகா் சிலை ஊா்வலத்தை அனுமதிக்க கோரிக்கை

தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் விநாயகா் சிலை ஊா்வலத்தை அனுமதிக்கவேண்டும் என இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் விநாயகா் சிலை ஊா்வலத்தை அனுமதிக்கவேண்டும் என இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ஆனந்த்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: விநாயகா் சதுா்த்தி விழா வரும் செப்.10-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 17 ஆண்டுகளாக இங்கு விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தால் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், நிகழாண்டு சிலை தயாரிப்புப் பணி நடைபெற்றுவரும் நிலையில், அரசு உரிய அனுமதி வழங்காததால் சிலை தயாரிப்பாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்தவும், சிலை ஊா்வலத்துக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி அரசு அனுமதியளித்து, விநாயகா் சிலை தயாரிப்பாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →