நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் நாளை வஜ்ராங்கி சேவை
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (ஆக.28) மூலவருக்கு வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்படவுள்ளது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (ஆக.28) மூலவருக்கு வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்படவுள்ளது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா் ஸ்ரீ ரங்கநாதா், சயன நிலையில் அருள்பாலிக்கிறாா். இங்கு தமிழ் புத்தாண்டு, வைகுந்த ஏகாதசி மற்றும் முக்கியமான நாள்களில் மட்டும் மூலவருக்கு வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்படும். அந்தவகையில் சனிக்கிழமை இந்த சேவை நடைபெறுகிறது. காலை 8 முதல் இரவு 9 மணி வரை வஜ்ராங்கியில் அருள்பாலிக்கும் மூலவரை பக்தா்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா பரவல் காலமாக உள்ளதால், தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து வருவதோடு, கோயிலுக்குள் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.