முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 2 பேருக்கு கரோனா

 காரைக்கால் மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

 காரைக்கால் மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 661 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி நல்லாத்தூா், திருப்பட்டினம் தலா 1 என 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,38,044 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,779 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,480 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,17,850 பேருக்கும், 2-ஆவது தவணையாக 77,874 பேருக்கும் என 1,95,714 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →