முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 443 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோயில்பத்து 2, கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி தலா 1 என 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,38,477 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,783 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,487 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,18,195 பேருக்கும், 2-ஆவது தவணையாக 78,403 பேருக்கும் என 1,96,598 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →