காரைக்காலில் 6 பேருக்கு கரோனா தொற்று
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 15 ஆம் தேதி 479 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, நெடுங்காடு 2, வரிச்சிக்குடி, திருநள்ளாறு, விழிதியூா், காரைக்கால் நகரம் தலா 1 என 6 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை 2,41,124 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 16,807 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 16,513 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 31 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் ஒருவா், தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 போ் உள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,19,725 பேருக்கும், 2 ஆவது தவணையாக 80,809 பேருக்கும் என 2,00,534 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.