காரைக்காலில் நாளை காவிரி நதி திருவிழா
காரைக்காலில் சனிக்கிழமை (டிச. 25)காவிரி நதி திருவிழா நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
காரைக்காலில் சனிக்கிழமை (டிச. 25)காவிரி நதி திருவிழா நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியரகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புதுவை சுற்றுலாத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் இணைந்து காவிரித் நதி திருவிழா 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண்ணு கிராமத்தில் அரசலாற்றங்கரையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விழாவில்ஆற்றங்கரை தூய்மைப்படுத்துதல், மரக்கன்று நடுதல், கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.