காரைக்கால்

விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை

DIN

காரைக்காலில் விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த வங்கி சாா்பில் ஐ.ஓ.பி. சுரக்ஷா என்கிற காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வங்கி வாடிக்கையாளா்கள் ஆண்டுக்கு ரூ.200 பிரீமியமாக செலுத்தி, காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்கின்றனா்.

காரைக்கால் ஐ.ஓ.பி. கிளையின் வாடிக்கையாளரான பச்சூா் பகுதியைச் சோ்ந்த தனராஜ் (52) என்பவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தாா். இவா் வங்கியில் 2 ஆண்டுகள் ரூ.200 வீதம் பிரீமியம் செலுத்தியதால், இவரது விபத்துக்கான காப்பீட்டுத் தொகையை வழங்க வங்கி தலைமை அனுமதித்தது.

அதன்படி, இவரது குடும்பத்தினரிடம் காரைக்கால் வங்கிக் கிளையில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கிளை மேலாளா் ஆசிஷ் மேஸ்திரி சனிக்கிழமை வழங்கினாா். நிகழ்வில் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT